குறுகிய விவரணம்

"பேர்ண் மாநிலம் சுவிஸிலுள்ள 26 மாநிலங்களில் (உறுப்பினர் மாநிலங்கள்) ஒன்றாகும். குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டாவது பெரிய மாநிலமாகும். பேர்ண் மாநிலத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் இது டொச் மற்றும் பிரான்ஸ் மொழி பேசும் நிலப்பரப்பை இணைத்து பாலமாக செயற்படுகிறது. "

எண்ணிக்கைகளும் உண்மைகளும்

பேர்ண் மாநிலம் பத்து இலட்சம் குடியிருப்பாளர்களை கொண்டிருப்பதுடன் அதில் 16 வீதமானவர்கள் வெளிநாட்டவர்க்களாயுமுள்ளனர். ஏறத்தாள 6000 சதுர கி.மீ பரப்பளவில் 346 குடியிருப்பாளர் கிராமசபைகளும் (Gemeinden|Communes), பத்து நிர்வாக பிரிவுகளும் உள்ளன. இதன் தலைநகரம் பேர்ண். அரசமொழி டொச் மற்றும் பிரான்ஸ். இருமொழித்தன்மை ஒரு பெருமதிமிக்க சிறப்பம்சத்தை கொண்டுள்ளது.

வரலாறு

பேர்ண் மாநிலத்திற்கு 800 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தேசிய வரலாறு உள்ளது. பேர்ண் நகரம் 1191ல் ஏற்கனவே உருவாக்கப்பட்டது. பின்னர் நகரம் வேகமாக விரிவடைந்தது. 1798 இல், பழைய பேர்ண் பிரெஞ்சுப் புரட்சியின் படைகளின் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. 1831 முதல் ஜனநாயகம் உருவாகத் தொடங்கியது. புதிய அரசியலமைப்பின் மூலம் முதன்முறையாக ஒரு சீரான சட்டம் ஏற்படுத்தப்பட்டது. 1848 இல், பேர்ண் சுவிட்சர்லாந்தின் தலைநகராக உறுதிசெய்யப்பட்டது. ஜுரா மாநிலம் 1979 ஆம் ஆண்டில் பேர்ண் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட மூன்று மாநிலங்களிலிருந்து உருவாக்கப்பட்டது.

சம்பிரதாயமும் பாரம்பரியமும்

மாநிலத்தின் வெவ்வேறு பிரதேசம் மற்றும் கிராமங்களில் வித்தியாசமான கலாச்சார மற்றும் பண்டிகைகளையும் கொண்டிருக்கும். அடிப்படையாக "ஒரே மாதிரியான " பேர்ண் சம்பிரதாயம் உருவாகவில்லை.
Emmental ல் Seeland ஐ விட வேறு விதமான கொண்டாட்டங்களும், மற்றும் பேர்ண் மேற்பகுதியில் பேர்ண்-ஜூரா அல்லது மத்திய பிரதேசத்தை விட வேறு பழக்க வழக்கங்களை பேணுகிறார்கள்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதன் சொந்த பண்புகள் உள்ளன. பேர்ண் மாநிலம் தனது வாழும் மரபுகளின் பட்டியலை வைத்திருக்கிறது. இதற்காக ஒரு சிறப்பு தேடுபொறி உள்ளது.