ஆலோசனை நிலையங்கள்

சில ஆலோசனை நிலையங்கள் பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சமயம் மற்றைய நிலையங்கள் குறிப்பிட்ட தலைப்புக்கு அல்லது வாழ்வின் பிரச்சனைகளுக்கு மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். இந்த வசதி வாய்ப்புகள் வாழும் பிரதேசத்திற்கேற்ப மாறுபடும் வழமையாக முதலாவது ஆலோசனை இலவசமானது. அதிகமாகத் தொடர்ந்தும் இலவசமாகலாம். அதிகமான இடங்களில் வெளிநாட்டு மொழிகளிலும் ஆலோசனை பெறலாம்.

பொதுவான ஆலோசனை நிலையங்கள்

பிராந்திய ஒருங்கிணைப்பு தொடர்பு இடம் (AI) (Ansprechstellen Integration | antennes d'intégration) என்பது வெளிநாட்டவர்களுக்கான மத்திய ஆலோசனை நிலையமாகும். இங்கு வேலை செய்பவர்கள் தினமும் எந்நேரமும் பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான விசேட ஆலோசனை நிலையங்களைத் தேடிக் கொடுப்பார்கள். அதைவிட தேடுபவர்களுக்குப் பொருத்தமான டொச்- அல்லது பிரான்ஸ் மொழி வகுப்புகளையும் உள்வாங்குதல் வசதிவாய்ப்புகளையும் செய்து கொடுப்பார்கள். முதலே பேசி உடன்பட்டால் (தொலைபேசி அல்லது நேரடியாக ) வேற்றுமொழிகளிலும் பேசலாம். முன் அறிவித்தலின்றியும் நேரடியாகப் போய் ஆரம்பத் தகவல்களையும் பெற்று தேவையாயின் ஒரு சந்திப்பிற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தகவல்களும் ஆலோசனையும் இலவசம்.
இதைவிட பொதுவான ஆலோசனை நிலையம், இவ்வாலோசனைகள் குறிப்பிட்ட பிறமொழியில் நடைபெறும் அல்லது குறிப்பிட்ட வாழிடப்பிரிவுக்கு பொறுப்பானதாக இருக்கும். வதியும் கிராமசபைப்பிரிவு அல்லது பிராந்திய ஒருங்கிணைப்பு தொடர்பு இடம் (AI) (Ansprechstellen Integration | antennes d'intégration) இல் இதுபோன்ற ஆலோசனை நிலையத்திற்கும் செல்லலாம். இதைவிட வெளிநாட்டினர் கழகங்களும், முதலாவது தகவல்களை சொந்த மொழியில் வழங்குவதால் ஒரு நல்ல இடமாக உள்ளது.

கிராமசபை நிர்வாகம் / நகரசபை நிர்வாகம்

அதிகமான சந்தர்ப்பங்களில் வதிவிடங்களின் நிர்வாகங்களே (Gemeindeverwaltung | administration communale, Stadtverwaltung | administration municipale) முதலாவது சிறந்த தொடக்க நிலையமாகும். இங்கு வேலைசெய்பவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தருவார்கள் அல்லது அதற்கென உள்ள ஆலோசனை நிலையத்திற்குப் பரிந்துரை செய்வார்கள். பேர்ண் மாநிலத்திலுள்ள அனைத்துக் கிராமசபைகளுக்கும் சொந்தமாக ஒரு இணையத்தளம் உண்டு. அதில் தொடர்பு விபரங்கள், திறந்திருக்கும் நேரங்களும் மேலதிக தகவல்களும் ஆலோசனை மற்றும் உள்வாங்குதல் சம்பந்தமான பிரதேசவாரியான ஒரு பகுதி நிரல்களும் இருக்கும்.

நிபுணத்துவம் பெற்ற ஆலோசனை நிலையங்கள்

பேர்ண் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலோ அல்லது எதாவது வாழ்க்கைப் பகுதியிலோ நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட ஆலோசனை நிலையங்களின் வசதிகள் பரந்து காணப்படுகிறது. உதாரணத்திற்குச் சில: வயோதிபர்.தொழில், வதிவிட அனுமதி, கல்வி, திருமணம்/விவாகரத்து, வளர்ப்பு, குடும்பம், நிதி (கடன் / திட்டமிடல் ), சுகாதாரம், வீட்டு வன்முறை, உள்வாங்குதல், உளப்பிரச்சனைகள், சிசுக்கள் பராமரிப்பு, கர்ப்பம், பாலியல்,தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், சமூகஉதவி சம்பந்தமான கேள்விகள் .இந்த வசதி வாய்ப்புகள் பிரதேசத்திற்கேற்றபடி மாறுபடும். ஒரு பிரதேசத்தில் ஒரு ஆலோசனை நிலையம் இல்லாவிடின் அநேகமாக ஒரு மத்திய ஆலோசனை நிலையம் பேர்ண், தூண் அல்லது பீல் இல் இருக்கும். முதல் ஆலோசனை வழக்கமாக இலவசமானது. ஒரு சில ஆலோசனை நிலையங்களின் தொடர்பு விபரங்கள் தனியான தலைப்புகளில் bern.ch இல் காணலாம். பிராந்திய ஒருங்கிணைப்பு தொடர்பு இடம் (AI) (Ansprechstellen Integration | antennes d'intégration) இலோ அன்றி வதியும் கிராமசபையிலோ பொருத்தமான ஆலோசனை நிலையங்களைத் தேடலாம்.
டொச்- அல்லது பிரான்ஸ் மொழி நன்றாகப் பேசத்தெரியாதவர்களுக்கு ஆலோசனை நிலையத்திற்குப் போக முன்பே மொழிபெயர்ப்பு வசதிகள் பற்றி தகவல் தருவார்கள். ஆலோசனை வேறு மொழிகளில் தரப்படலாம். அன்றி மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்து தரப்படலாம். அல்லது சொந்தமாக ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்துவரச் சொல்லலாம்

டொச் மொழி நன்றாகப் பேசத்தெரியாதவர்களுக்கு ஆலோசனை நிலையத்திற்குப் போக முன்பே மொழிபெயர்ப்பு வசதிகள் பற்றி தகவல் தருவார்கள். ஆலோசனை வேறு மொழிகளில் தரப்படலாம். அன்றி மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்து தரப்படலாம். அல்லது சொந்தமாக ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்துவரச் சொல்லலாம்

துவேச அவமதிப்பு

பேர்ண் மாநில சார்பாக இரு ஆலோசனை நிலையங்கள் பேர்ண் குடியிருப்பாளருக்கு இலவச மற்றுன நம்பிக்கையான ஆலோசனைகளை வழங்குகின்றன. இன பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், உதவியை எதிபரத்திருக்கும் மக்களுக்கு உதவும் பேர்ண் சட்ட ஆலோசனை மையத்திலிருந்து சட்ட ஆலோசனையைப் பெறுகிறார்கள். gggfon (வன்முறை மற்றும் இனவெறிக்கு எதிராக ஒன்றிணைதல்),ஆலோசனை நிலையம் மோதல் தலையீடு, மத்தியஸ்தம் மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றுடன் தனிப்பட்ட சமூக ஆலோசனைகலை வழங்குகிறது.

பெண்களுக்கான ஆலோசனை நிலையம்

பேர்ண் மாநிலத்தில் பெண்களுக்கு பல தொடர்பு இடங்கள் உள்ளன. அவர்கள் பல்வேறு தலைப்புகளில் தகவல்களையும் மற்றும் தனிப்பட்ட அல்லது சட்ட கேள்விகளுக்கு ஆலோசனை கூறுகிறார்கள். ஆலோசனை மையத்தைப் பொறுத்து வெவ்வேறு தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆலோசனை மையங்கள் திருமணம், சகவாழ்வு, பிரிதல், விவாகரத்து, காவல், பட்ஜெட், ஓய்வூதியம், குடிவரவு சட்டம், மகப்பேறு விடுப்பு, தொழிலாளர் சட்டம், குத்தகை சட்டம், பொது ஒப்பந்த சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் பற்றிய தகவல்களை வழங்குகிறது.