அவசர இலக்கங்கள்

அவசர இலக்கங்கள் தினமும் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளக்கூடியவை. குறுகிய இலக்கங்கள் (3 இலக்கங்கள் ) இலவசமானவை. மற்றைய இலக்கங்களுக்கு சாதாரண தொலைபேசிக்குரிய கட்டணமே அறவிடப்படும்.

பொதுவான அவசர இலக்கம்: 112

இந்த இலக்கத்துடன் பொலிஸ் அவசர நிலையத்திற்கு தொடர்பு கொள்ளலாம். அவசரத்தின் வகையையும் விதத்தையும் பொறுத்து பொலிஸே மற்றைய இடங்களுடன் தொடர்பை ஏற்படுத்திவிடும். (உ+மாக தீயணைப்புப்படை).

பொலிஸ்: 117

இந்த இலக்கத்துடன் பொலிஸ் அவசர நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளலாம்.

தீயணைப்புப்படை: 118

இந்த இலக்கத்துடன் தீயணைப்புப்படை நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

முதல் உதவி / பாதுகாப்புச்சேவை: 144

இந்த இலக்கத்தில் பாதுகாப்புச்சேவையின் செயற்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்த 144 இலக்கத்தில் உடனடி அம்புலன்ஸ் தேவைக்கோ அல்லது ஆபத்தின் தீவிரத்தை அறியமுடியாமலிருந்தாலோ (உதாரணமாக விபத்தின் பின்பு ) தொடர்பு கொள்ளலாம்.
மற்றைய மருத்துவப்பிரச்சனைகளுக்கு முதலில் குடும்பவைத்தியரைத் தொடர்பு கொள்ளவேண்டும். சிகிச்சை நிலையம் திறந்திருக்காத நேரங்களில் எப்போதும் ஒரு குடும்பவைத்தியர் அவசரசேவை இயங்கும். யார் அவசரசேவை வைத்தியர் என்பது குடும்பவைத்தியரின் தொலைபேசி அழைப்பை எடுத்தால் அதில் பதியப்பட்டோ அல்லது பிரதேசச் செய்தியிலேயோ அறியலாம். அதைவிட மாநில அவசர எண் 0900 576 740 (கவனம்: கட்டணத்திற்குரியது. 1.98/நிமி). இலும் அறியலாம். இங்கு மருத்துவ ஆலோசனையும் சரியான அருகிலுள்ள இடமும் (வைத்தியர், வைத்தியசாலை) வழிகாட்டப்படும். தாமே ஒரு அவசர சிகிச்சைக்கு (வைத்தியசாலை/ அவசர சிகிச்சை) தேடிச் செல்வதும் சாத்தியப்படலாம்.

அவசர மருந்தகம்

வழக்கமான திறக்கும் நேரத்திற்கு புறம்பாக திறந்து மருந்துகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சில பிராந்திய அவசர மருந்தகங்கள் உள்ளன. இந்த மருந்தகங்கள் அவசர காலங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றன (இரவு அல்லது சேவை கூடுதல் கட்டணம்). அவசர மருந்தகத்தின் சேவைகள் வழக்கமாக உடனடியாகவும் பணமாகவும் செலுத்தப்பட வேண்டும்.

அவசரப் பல்வைத்தியர்

பல் விபத்து அல்லது பல்வலி ஏற்பட்டால், அவசர பல் மருத்துவர்கள் வழக்கமான திறக்கும் நேரத்திற்கு வெளியே பணியில் உள்ளனர். இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் அவர்களை அழைக்கும் போது சரியான தொகையைப் பற்றி விசாரிக்கலாம். சேவைகள் பொதுவாக ரொக்கமாக செலுத்தப்படுகின்றன.

நஞ்சு - அவசரம்: 145

யாராவது நஞ்சை விழுங்கினால் அல்லது சந்தேகப்பட்டால் இந்த இலக்கத்தில் உள்ள வைத்தியர்களும் நிபுணர்களும் உதவுவார்கள். அவர்கள் நஞ்சுபட்டால் என்ன செய்யும் என விளக்கம் தருவார்கள். உயிராபத்தானநிலையில் இருந்தால் உடனடியாக 144 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். இணையத்தளப் பகுதியில் நஞ்சு /நஞ்சூட்டல் பற்றிய விபரமான தகவல்களைக் காணலாம்.

வளர்ந்தவர்களுக்கான ஆலோசனை: 143

தொலைபேசி இலக்கம் 143 (உதவும் கரங்கள், Dargebotene Hand) இல் யாராவது தம் பிரச்சனைகள் எந்த வகையாக இருந்தாலும் அவை பற்றி யாருடனும் பேச விரும்பினால் (டொச். பிரெஞ்.இத்தாலி மொழிகளில் ) பேசலாம். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கவலையான கடினமான சந்தர்ப்பங்களிலும் தொடர்பு கொள்ளலாம். இங்கு பேசப்படுவது நம்பகமானது. அநாமதேயமானது. விரும்பினால் மட்டும் பொருத்தமான உதவிகள் வசதிகள் பற்றிய தகவல்களைப் பெறலாம். இங்கு ஈ - மெயில் மூலமோ அல்லது அரட்டை மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

சிறுவர்கள் ஃ இளையவர்களுக்கான ஆலோசனை: 147

தொலைபேசி இலக்கம் 147 இல் சிறுவர்களும் இளையவர்களும் தம் பிரச்சனைகள் எந்த வகையாக இருந்தாலும் அவை பற்றி யாருடனும் பேச விரும்பினால் (டொச். பிரெஞ்.இத்தாலி மொழிகளில் ) பேசலாம். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கவலையான கடினமான சந்தர்ப்பங்களிலும் தொடர்பு கொள்ளலாம். எந்நேரமும் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளலாம்.இங்கு பேசப்படுவது நம்பகமானது. அநாமதேயமானது. ஈ மெயில் குறுஞ்செய்தி அல்லது அரட்டை மூலம் தொடர்பு கொள்ளலாம்.

பெற்றோர் அவசர அழைப்பு: 0848 35 45 55

பெற்றோர் அவசர அழைப்பின் போது (Elternnotruf) பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வளர்ப்புப் பற்றிய கேள்விகளுக்கு நிபுணர்கள் ஆலோசனை தருவார்கள். இங்கு சொந்தப் பிள்ளையின் அல்லது வேறு பிள்ளைகளின் நடவடிக்கைகளால் பதட்டப்பட்டாலோ அன்றி சுமையாக உணர்ந்தாலோ உதவி பெறலாம். சொந்தப்பிள்ளையோ அல்லது வேறு பிள்ளையோ உடல் / உளரீதியாகத் தவறாகக் கையாளப்படுவதாக அச்சப்பட்டாலும் பெற்றோர் அவசர அழைப்பை நாடலாம். இங்கு பேசப்படுவது நம்பகமானது விருப்பத்தின் பேரில் அநாமதேயமாகக் கையாளப்படும். ஈ மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மருத்துவக் கேள்விகளுக்கும் பெற்றோர் அவசர அழைப்பு தொடர்ந்தும் உதவி செய்யும்.

வீட்டில் வன்முறை (பெண்களுக்கு): 24 மீபநேர அவசர இல. AppElle : 031 533 03 03

பேர்ண், பீல் மற்றும் தூண் பிரதேச பெண்கள் காப்பகம் (Frauenhaus | Maison des femmes) 24 மணி நேரமும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆலோசனையும் உதவியும் வழங்குகிறது. அவர்களுக்காக உறவினர்களோ அன்றி நிபுணத்துவம் பெற்றவர்களோ இதனை நாடலாம். இங்கு பேசப்படுவது நம்பகமானது தேவைப்பட்டால் அநாமதேயமாகக் கையாளப்படும். மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் வீட்டு வன்முறையில் ஆண்கள் பாதிக்கப்பட்டாலும்கூட அது பற்றிய தொடர்பு விபரம் தொடர்ந்த ஆலோசனைகள் பற்றிய விளக்கமான தகவல்களைப் அறிய இணைந்த வாழ்வு மற்றும் பிள்ளைகள் > குழப்பங்கள் பகுதியில் பார்க்கலாம்.