மதுபானம் / புகையிலை / போதைப் பொருட்கள்

"போதைப் பொருட்கள் வைத்திருப்பது, பாவிப்பது அன்றி விற்பனை செய்வது தண்டணைக்குரியது. மதுபானம் புகையிலை வாங்குவதற்கும்; வயதெல்லை உண்டு. "

போதைப் பொருட்கள்

சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருத்தல், விற்றல் அல்லது பாவித்தல் தண்டணைக்குரிய குற்றம். இது சிறிய அளவிற்கும் பொருந்தும். இதில் எவை சட்டவிரோதமாவை என்பது மருந்துப்பாவனைச்சட்டத்தில் (Betäubungsmittelgesetz | loi sur les stupéfiants) வரையறுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களின் வணிக அடிப்படையான விற்பனையானது அதிகூடிய தண்டணைக்குட்படலாம்.

மதுபானமும் புகையிலையும்

மதுபானமும் புகையிலையும் விற்பதற்கும் வயதெல்லை உண்டு. பேர்ண் மாநிலத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளையவர்களுக்கு மதுபானவகைகள் உ+மாக பியர்,வைன்,ஆப்பிள் வைன் விற்கவோ அல்லது கொடுத்துவிடவோ கூடாது. சில மதுபானவகைகளை உம்: Spirituosen மற்றும் புகையிலைப்பொருட்கள் என்பன 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தான் விற்பனை செய்யலாம். எவராவது மதுபானம் அல்லது புகையிலை பொருட்களை இளைஞர்களுக்கு கொடுதல் தண்டனைக்குரியது. உணவகங்கள் மற்றும் கடைகளில் உள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வயதை சரிபார்க்க வேண்டும்.

புகைத்தலுக்குத் தடை

சுவிஸில் புகைத்தலுக்கான தடை மாநிலங்களுக்கிடையில் வித்தியாசமாக கட்டுப்படுத்தப்படுகிறது.
பேர்ண் மாநிலத்தில் புகைத்தல் தடையானது
மூடப்பட்ட, பகிரங்க நுழைவாயில் கொண்ட இடங்கள் வைத்தியசாலை, நிர்வாகக் கட்டிடங்கள், பாடசாலை, தொல்பொருட்காட்சியகம், சினிமா, அரங்கு , புகையிரதம், பஸ், கடைகள், கடைத்தொகுதிகள் ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உணவகங்களுக்குள் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. விதிவிலக்கு புகைபிடிக்கும் அறைகள், அவை பிரிக்கப்பட்ட மற்றும் காற்றோட்டமாக உள்ளன, ஆனால் இவை குறைவாகவே உள்ளன. புகைபிடித்தல் தடை சுகாதார அபாயங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டிருக்கின்றன.