சுவிஸில் ஒன்றாக வாழுதல்

ஒவ்வொரு நாட்டிற்கும் அதனுடைய கலாச்சாரத் தனித்தன்மை இருக்கும். அது போலவே சுவிசிக்கும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒருசில எழுதாச் சட்டங்கள் உண்டு. எனினும் இவை சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறுபடலாம்.

பல வகையான கலாச்சாரங்கள்

சுவிஸ் ஒரு வண்ணமயமான கலாச்சாரக்கலவையான நாடு. குறிப்பாக நாலு தேசிய மொழிபிரதேசங்களை கொண்டது. வேறுவேறு மாநிலங்களின் எண்ணங்கள் வேறுவேறாக இருப்பதுபற்றி ஆச்சரியப்படவேண்டியதில்லை. டொச் சுவிஸ் பிரதேச கலாச்சாரம் பிரான்ஸ் சுவிஸ்பிரதேச கலாச்சாரத்துடன் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அத்துடன் நகர மற்றும் கிராமப்புறங்களுக்கிடையிலும் பெரிய வித்தியாசம் இருக்கும். எனினும் அவற்றிற்கிடையில் சிறிதளவு ஒற்றுமையும் சேர்ந்து இருக்கும்.

வணக்கம் தெரிவித்தல்

சுவிஸில் வணக்கம் தெரிவிக்கும் போது ஆண்கள் பெண்கள் என்றாலும் கூடக் கையைக் கொடுத்து கண்களுக்குள் நேராகப் பார்க்க வேண்டும். பேர்ண் மாநிலத்தில் வழமையான வாழ்த்து "Grüessech" என்று பேர்ண் டொச் இலும் "Bonjour " பிரான்ஸ் மொழியிலும் இருக்கும் (நண்பர்களுக்கிடையில் வாழ்த்து மொழி வேறு வடிவில் "Hallo" அல்லது "Tschou" என்று டொச் இலும்,"Salut "என்று பிரான்ஸ் இலும் ). சில பிரதேசங்களில் வேறு வடிவிலும் இருக்கும்। எவருக்கு நிச்சயமில்லாத நிலை தோன்றுகிறதோ "Grüessech" அல்லது "Bonjour " என்று கூறலாம். கிராமப்புறங்களில் ஒருவரையொருவர் தெரியாவிட்டாலும்கூட வீதியில் காணும்போது வணக்கம் தெரிவிப்பார்கள். "நன்றி " "பரவாயில்லை " என்பன முக்கியமானவை. உதாரணமாக ஒரு கடையிலோ அல்லது உணவகத்திலோ பலமுறை "நன்றி " "பரவாயில்லை " சொல்வது சம்பிரதாயமாகி விட்டது.

நேரம் தவறாமை

அதிகமான பிரபல்யமானது சுவிஸ் மக்கள் நேரம் தவறாமையைக் கைக்கொள்ளல். யாராவது 5 நிமிடங்களைவிடக் கூடப்பிந்தினால் தொலைபேசியில் அழைத்து தெரிவிக்கலாம். பிரதானமாக இந்தத் தொழில் உலகில் நேரந்தவறாமை உயர்ந்த பெறுமதியாகக் கருதப்படும்.
5 நிமிடங்கள் கூட பிந்தியதாக கருதப்படும். எவராவது பிந்தினால், தனது மேலாளருக்கு அல்லது சக வேலை செய்பவருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். யாரையாவது தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பினால் முன்கூட்டியே நேரம் தீர்மானிக்கப்படுகிறது. முன்னறிவித்தலின்றி போவது தனிப்பட்ட இடங்களிலும் வழமையில் இருப்பதில்லை.

மறைமுகத் தொடர்பாடல்

ஒருவருக்கொருவர் சரியாகப் புரிந்துகொள்வது எப்போதும் எளிதானது அல்ல, குறிப்பாக உங்களிடம் (இன்னும்) பொதுவான மொழி இல்லையென்றால். சுவிட்சர்லாந்தில் தொடர்பு கொள்ளும் பழக்கமும் மனிதர்களுக்கு மனிதர் வேறுபடுகிறது. இருப்பினும், பொதுவாக, மரியாதை மிகவும் முக்கியமானது என்று ஒருவர் கூறலாம். தங்களை நேரடியாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தும் நபர்கள் இருக்கிறார்கள், ஆனால் நேரடி உரையாடல்களைத் பெரும்பாலும் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் மறைமுகமாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்னும், சில நேரங்களில் விமர்சனம் கவனதாகில் கொள்ளப்படுகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எளிதானதல்ல மற்றும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். மற்றவர் சொல்வதைக் நன்கு கேட்பது, நீங்கள் கேட்டதை மீண்டும் சொல்வது மற்றும் ஏதாவது புரியவில்லை என்றால் கேள்விகள் கேட்பது உதவலாம். இது எழுதப்பட்ட தகவல்தொடர்புக்கும் பொருந்தும். சில நேரங்களில் மோதல் சூழ்நிலைகளில் நேரடி மோதல் தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, நேரிடையான உரையாடலைத் தேடுவதற்குப் பதிலாக, உங்கள் அயலவரிடம் ஏதாவது தொந்தரவு செய்தால், உங்களுக்கு ஒரு கடிதம் வரும். தெளிவில்லாத பிரச்சினையாயின் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விசாரிப்பது எப்போதும் நலமானதாகும்.