திறந்திருக்கும் நேரங்கள் / விடுமுறை நாட்கள்

சுவிஸில் அதிகமான கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டியிருக்கும். விதிவிலக்காக இருப்பவை, புகையிரத நிலையத்தில் மற்றும் எரிபொருள் நிரப்புமிடங்களில் உள்ள கடைகள். சட்டப்படியான விடுமுறை நாட்களை மாநிலமே ஒழுங்கு செய்யும்.

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள் தொழிற்சட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 1 ஆகஸ்ட் (தேசியவிடுமுறை நாள் ) சுவிஸ் முழுவதற்குமான சட்டப்படியான விடுமுறைநாள். அதை விட ஒவ்வொரு மாநிலமும் மேலதிகமான சட்டப்படியான விடுமுறை நாட்களை தீர்மானிக்கலாம். பேர்ண் மாநிலத்தில் பின்வரும் சட்டரீதியான விடுமுறை நாட்கள் உள்ளன : புதுவருடம் (ஜனவரி 1), பெரியவெள்ளி (ஈஸ்ரருக்கு முந்தைய வெள்ளி), ஈஸ்டர் திங்கள் (ஈஸ்டர் இற்கு பிறகு வரும் திங்கள்), மோட்சத்திருநாள் (ஈஸ்ரர் ஞாயிருக்கு 40 நாட்களின் பின்புவரும் வியாழன் ), வெள்ளைத்திங்கள் (ஈஸ்டர் இற்கு பிறகு 50 ம் நாள்), தேசிய விடுமுறைநாள் (1.ஆகஸ்ட் ) நத்தார் (மார்கழி 25), செயின்ட் ஸ்டீபன் தினம் (மார்கழி 26).

கடைகள் திறந்திருக்கும் நேரங்கள்

கடைகள் திறந்திருக்கும் நேரங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். பேர்ண் மாநிலத்தில் பொதுவாக கடைகள் திறக்கும் நேரம் பின்வருவனவாக உள்ளது:

  • திங்கள் முதல் வெள்ளி வரை 6 மணி முதல் 20 மணி வரை
  • சனிக்கிழமை 6 மணி முதல் 17 மணி வரை(இது விடுமுறை நாட்களுக்கு முதல் நாளுக்கும் பொருந்தும்.

வாரத்தில் ஒரு நாள் மாலை விற்பனை 22 மணி வரை.
ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான கடைகள் பூட்டியிருக்கும். விதிவிலக்காக இருப்பவை, புகையிரத நிலையத்தில் மற்றும் எரிபொருள் நிரப்புமிடங்களில் உள்ள கடைகள், இவை சாதாரணமாக 7 நாட்களும் திறந்தும், இதில் பெரும்பாலானவை மற்றைய கடைகளைவிட முந்தித்திறந்தும் பிந்திப்பூட்டியும் இருக்கும். ஏனைய கடைகள் வருடத்தில் இரு தடவைகள் ஞாயிறு அல்லது விடுமுறை தினங்களில் திறக்கலாம்.

அரச நிர்வாகங்கள் திறந்திருக்கும் நேரங்கள்

மாநில நிர்வாகங்களின் திறந்திருக்கும் நேரங்கள் மாறுபட்டவை. பொதுவாக இந்நிலையங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலையும் மாலையும் திறப்பதுடன் மதிய போசன நேரத்தில் மூடப்பட்டும் இருக்கும். கிராமசபை நிர்வாகங்கள் திறந்திருக்கும் நேரங்கள் வித்தியாசப்படும். எல்லாவற்றையும்விட ஆகச்சிறிய கிராமசபை நிர்வாகங்கள் திறக்கும் நேரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். முதலே இணையத்திலோ அன்றி தொலைபேசியிலோ திறந்திருக்கும் நேரங்கள் பற்றி அறிந்து கொள்ளச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.