பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் பாதுகாப்பு

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு ஏஜென்சிகள் ஆதரிக்கின்றன - பெரும்பாலும் நமக்குள்ளான உரையாடல்கள் இரகசியமானது மற்றும் இலவசம். பாதிக்கப்பட்டவர்களைச் சுற்றியுள்ளவர்களும் உதவியை நாடலாம்.

அவசரகாலத்தில்

அவசரகாலத்தில்: காவல்துறையை எச்சரிக்கவும் (தொலைபேசி.112).

பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பு பெறலாம். ஒரு நிபுணர் அழைப்பிற்குப் பதிலளிக்கிறார்! நீங்கள் ஹாட்லைன் எண்ணை இரவும் பகலும் அழைக்கலாம் (தொலைபேசி. 031 533 03 03).

மேலும் அவசரகால எண்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு மையத்தின் ஆலோசனை (Opferhilfe)

பாதிக்கப்பட்டவர் களுக்கான ஆதரவு ஆலோசனை மையங்கள். (Opferhilfe) தங்கள் குடும்பங்களில் வன்முறையை அனுபவிக்கும் மக்களுக்கு ஆலோசனைகளை தெரிவிக்கின்றன இந்த உதவி இலவசம். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அடுத்த நடவடிக்கைகளை நிபுணர்களுடன் சேர்ந்து திட்டமிடலாம்.

ஊழியர்கள் ரகசியத்தன்மைக்கு உட்பட்டவர்கள். விவாதங்களைப் பற்றி யாருக்கும் தெரிவிக்க அவர்களுக்கு அனுமதி இல்லை என்பதே இதன் பொருள். காவல்துறையிடம் கூட எதையும் பேச மாட்டார்கள்

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவு

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவு

  • பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு பெர்ன் (Opferhilfe Bern): 031 370 30 70, www.opferhilfe-bern.ch (DE | FR)
  • உதவும் கை (Dargebotene Hand): 24/7 ஆலோசனை, தொலைபேசி. 143, www.143.ch (DE | FR)