நான் எங்கே உதவி பெற முடியும்?
குடும்ப வன்முறைக்கு எதிரான பெர்ன் கல்வித் திட்டம் (Berner Lernprogramm gegen Häusliche Gewalt) வன்முறை இல்லாமல் மோதல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை மக்களுக்குக் கற்பிக்கிறது. இந்தத் திட்டம் பெரியவர்களுக்கானது. ஒரு மொழிபெயர்ப்பாளரும் இருப்பார். முதல் அமர்வு இலவசம்.
எவருக்கும் உடனடியாகப் பேசுவதற்கு ஆள் தேவைப்பட்டால், உதவிக் கையை (Dargebotene Hand) தொலைபேசி, மெசேஜ், சேட் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். அங்கே எப்போதும் யாரோ ஒருவர் இருப்பார். இரவில் கூட தொடர்பு கொள்ளலாம். பெயர் குறிப்பிடாமல் (அநாமதேயமாக) தொடர்பு கொள்ளலாம்.
சிறப்பு வன்முறை பிரிவு (Fachstelle Gewalt) வன்முறை பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறது.