கட்டாய திருமணம் என்றால் என்ன?
ஒருவர் குடும்பத்தின் அழுத்தத்தின் பேரிலும், அந்த நபரின் சொந்த விருப்பத்திற்கு மாறாகவும் இன்னொருவரை மணந்தால், அது கட்டாயத் திருமணம் எனப்படும். திருமணம் செல்லாததாக அறிவிக்கப்படலாம். திருமணத்தில் இருக்க வேண்டுமா அல்லது பிரிந்து வாழ வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் மக்களுக்கு உண்டு. ஒருவர் தனது விருப்பத்திற்கு மாறாக திருமணத்தில் இணைந்திருந்தால், அது கட்டாய திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது.
கட்டாயப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள்: மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், மன அழுத்தம் அல்லது உடல்ரீதியான வன்முறை
சுவிட்சர்லாந்தில் கட்டாயத் திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது.