அயலவர்கள்

ஒவ்வொரு வீட்டிலும் குடியிருப்பிலும் அயலவர்களின் தொடர்புகள் ஒரே மாதிரித் தீவிரமாக இருக்காது. ஆனாலும் அயலவர்களுடன் பேசிக்கொள்வது - அதிலும் பிரச்சனைகள் வரும்போது பேசிக்கொள்வது பரிந்துரை செய்யப்படுகிறது.

தொடர்பு கொள்ளல்

சில வீடுகள் குடியிருப்புகளில் அயலவர்கள் ஒருவரோடொருவர் மழைத்தொடர்புகளை வைத்துள்ளனா (விழாக்கள் போன்றன). அறோ மாநிலத்தில் புதிதாக குடிபுகுந்தவர்கள் அயலவர்களுடன் நேரடியாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வது பரவியுள்ள வேளை இது மற்ற இடங்களில் அதிகம் நடைபெறுவதில்லை. அயலவர்கள் மற்றவர்களின் தொடர்புகளை விரும்பாவிடின்.அது புதிதாகக் குடிபுகுந்தவர்களில் தங்கியில்லை. ஆனாலும் அவர்களை முக மலர்ச்சியுடன் எதிர்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். அதைவிட அங்குள்ள மக்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொள்வது இன்னுமொரு வசதியாகும். உதாரணத்திற்கு கழகங்கள்.

வீடு பராமரிப்பு ஒழுங்குவிதி

அதிகமான வாடகைக்குடியிருப்பாளர்கள் அல்லது சொந்த வீட்டுரிமையாளர்கள் வாழும் எல்லா வீடுகளிற்கும் வீடு பராமரிப்பு ஒழுங்கு விதி (Hausordnung | Règlement de maison).) இருக்கும். இது அதிகமாக வாடகை ஒப்பந்தத்துடன் சேர்த்துக் கொடுக்கப்படும். இந்த விதிகளுள் சேர்ந்து வாழ்வது மற்றும் துணி துவைக்கும் இடங்கள் போன்ற பொதுவான அறைகளைப் பாவிக்கும் முறைகள் பற்றி நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சுவிசில் வீட்டுப் பராமரிப்பு ஒழுங்கு விதிகளுக்கமைய நடப்பது மிகவும் மதிப்பான விடயமாகும். இதில் அமைதி காக்கும் நேரங்கள் போன்றன சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பிரச்சனைகள்

வீட்டில் வாழும் மற்றவர்கள் வீட்டுப்பராமரிப்பு விதிகளைக் கடைக்கொள்ளாமல் இடைஞ்சல் செய்வதாக உணர்ந்தால் முதலில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுவது பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும் பிரயோசனம் கிடையாவிடின் வீட்டுரிமையாளர் அல்லது வீட்டு நிர்வாகத்தை நாடலாம். மிகவும் கடினமான சந்தர்ப்பங்களில் பொலிஸை அழைக்கலாம். (தொலைபேசி 117 ) வன்முறை மற்றைய அயலில் நடப்பதைக் கண்டால் அயலவரின் நலனில் கவலை கொண்டு பொலிஸை அழைக்கவேண்டும்.