ஒருங்கிணைப்பு (உள்வாங்குதல்) வசதி

ஒருங்கிணைப்பைப் பாடசாலைகளிலும் வேலையிடங்களிலும் காணலாம். மேற்குறிப்பிட்ட வசதிகள் கிடையாதவர்களுக்கு வேறும் பலவகையான ஒருங்கிணைப்பு வசதிகள் உள்ளன.

குறிப்பிட்ட வசதிகள்

வெளிநாட்டவர்கள் சுவிஸ் மக்களுடன் சேர்ந்து வாழவும் தொடர்பு கொள்ளவும் பல வகையான குறிப்பிட்ட வசதிகள் உள்ளன. அவை மற்றவர்களுடன் சேர்ந்து பேசுவது ஓய்வுநேர வசதி வாய்ப்புக்கள் விரிவுரைகள் அல்லது வகுப்புகளாகும். இந்த வாய்ப்புகள் பற்றி பேர்ண் ஒருங்கிணைப்புத் தொடக்க நிலையம் அல்லது வதியும் கிராமசபை அறியத்தரும். அதிகமான கிராமசபைகள் புதிதாகக் குடிவந்தவர்களை வரவேற்பதற்காக நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும். - முதல் கண்ணோட்டத்தைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.

கழகங்கள்

பேர்ண் மாநிலத்தில் அதிகமான குடியிருப்பாளர்கள் ஏதோ ஒரு கழகத்தில் (Verein | Association) அங்கத்தவராயிருப்பார்கள். பல வகைப்பட்ட ரசனைக்கேற்ப அதிக கழகங்கள் உள்ளன. சிறிய கிராமசபைகளில் கூட விளையாட்டு - கலாச்சாரம் மேலும் பல கழகங்கள் உள்ளன. அவை மனிதர் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள சிறந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றன.அதிகமான கழகங்கள் அனைத்து மக்களுக்காகவும் திறந்துள்ளன. கழகங்கள் பற்றிய தகவல்களை கிராமசபைகளின் இணையத்தளங்களில் தேடலாம்.

வெளிநாட்டவர் அமைப்புகள்

வெளிநாட்டவர்கள் தமக்குத் தாமே ஒழுங்கு செய்யக்கூடியமாதிரி மொழி நாடு சமய வாரியாகப் ப அமைப்புகள் உள்ளன. இவ் அமைப்புகள் புதிதாக சுவிசுக்குக் குடியேறிய தமது அங்கத்தவர்களுக்கு ஒருங்கிணைப்புக்கான உதவிகள் மற்றும் ஆலோசனை வசதிகளைக் கொடுப்பதன் மூலம் பேர்ண் மாநிலத்திற்கு உதவுகிறது.

இளையவர்களுக்கான வசதிகள்

பேர்ண் மாநிலத்திலுள்ள இளையவர்கள் தமது ஓய்வு நேரத்தைக் கழிக்கவும் தமது வயதையொத்தவர்களுடன் பழகிக் கொள்ளவும் எனப் பல விசேட வசதிகள் உள்ளன. அதிகமான கிராமசபைகளில் ஓய்வு நேரச் சலுகைகளுடன் கூடிய சந்திப்புக்கள் உள்ளன. இங்குள்ள இளையவர்களைப் பராமரித்து அவர்கள் எண்ணங்களைச் சேர்த்து செயற்திட்டமாக்குவார்கள் (Jugendarbeit | Animation de jeunesse). இச் சலுகை வழக்கமாக இலவசமானது. இளைஞர் அமைப்புகளில் ஒரே வயதினர் சேர்ந்து தடகள இயற்கை விளையாட்டுக்களில் பங்கெடுப்பார்கள். இதைக் கழகங்கள் கிராமசபைகள் அல்லது தேவாலயங்கள் நடத்தலாம். இந்த சலுகைகள் அனைத்து இளையோருக்கும் உரியது. வதியும் கிராமசபைகளில் மேலதிக விபரங்களை அறியலாம்.