வசதி வாய்ப்புக்கள்
பேர்ண் மாநிலத்தில் மொழி வகுப்புகள் வித்தியாசமான இலக்குகள் கொண்ட குழுக்களாக பல வழங்குநர்களால் நடத்தப்படுகின்றன. சில வழங்குநர்கள் வணிக நோக்கத்திற்காகவும் மற்றவை இலாபத்திற்காகவோ அல்லது மாநிலமளவிலோ நடத்தலாம். எவர் லத்தீன் எழுத்துக்களை எழுதத்தெரியாமல் இருக்கிறாரோ அல்லது எழுத வாசிக்கத் தடுமாறுகிறாரோ அவர் எழுத்துவகுப்புக்குப் (Alphabetisierungskurs | Cours d'alphabétisation) போகலாம். மொழி வகுப்புக்குப் போக முன்பு வகுப்பின் தன்மை அதற்குரிய கட்டணம் பற்றி அறிந்திருக்கவேண்டும்.தாய்மார் தம் பிள்ளைகளுடன் போவதற்கென அதிகமான கிராமசபைகளில் நடத்தப்படும் விசேட வகுப்பு மூலம் தாய்மார் மட்டுமல்ல பிள்ளைகளும் கூட மொழியால் ஊக்குவிக்கப்படுகிறார்கள் (MuKi-Deutsch | Cours de français mère-enfant). பிரதேச ஒருங்கிணைப்புத் தொடர்பு நிலையம் (Ansprechstellen Integration | antennes d'intégration) அல்லது வதியும் கிராமசபை சலுகைகள் பற்றி அறியத்தரும்.