எச்சரிக்கைக் கடிதமும்
எவராவது சரியான கால எல்லைக்குள் கட்டணங்களைச் செலுத்தாவிடின் சாதாரணமாக முதலாவது மற்றும் இரண்டாவது எச்சரிக்கைக் கடிதங்கள் வரும் (Mahnung | Rappel). அதன் பின்பு எந்த நேரத்திலும் கட்டணம் அனுப்பியவர் வசூலிப்பு நடைமுறையை (Betreibung | Poursuite |) தொடரலாம். இதன்போது கட்டணம் கட்ட வேண்டியவருக்கு வசூலிப்பு நடைமுறை அலுவலகத்திலிருந்து (Betreibungsamt | Office des Poursuites) கட்டணத்தைக் கட்டச் சொல்லி கடிதம் வரும். அதன் போது மேலதிக சேவைக் கட்டணமும் சேர்ந்து வரும். இந்நடைமுறை சட்டப்படி தவறென கருதுமிடத்து அவர் அதற்கு எதிரான ஒரு சட்டநடவடிக்கையை (Rechtsvorschlag | Opposition) குறிப்பிட்ட வசூலிப்பு நடைமுறை அலுவலகத்தில் தொடரலாம். கவனம்: வசூலிப்பு நடவடிக்கையானது சம்பளப்பிடிப்பு அல்லது பெறுமதியான பொருட்களை எடுத்துச்செல்லல் போன்ற நடவடிக்கையாக இருக்கலாம். அத்துடன் வசூலிப்புநடைமுறையானது, வசூலிப்பு பதிவேடுகளில் (Betreibungsregister | Registre des poursuites) பதியப்படும் (பணம் செலுத்தப்பட்டிருந்தாலும்). இது மற்றவற்றுடன் வேலை - அல்லது வீடுதேடுதலின் போது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.