குறைந்த பணத்துடன் சீவித்தல்

சுவிஸில் வாழ்க்கைச் செலவு கூட. அதனால் சில பொருட்களை பாவித்த பொருட்களாக வாங்கிப் பாவிப்பது பிரயோசனப்படும். பணத் தட்டுப்பாடு உள்ளவர்கள் சில விசேட கடைகளில் மலிவாக வாங்கலாம்.

பாவித்த பொருட்கள்

சுவிஸில் பல பாவித்த பொருட்களின் கடைகள் (Brockenhäuser | Brocantes) உள்ளன. அங்கு பாவித்த பொருட்களை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். விசேட சந்தைகளிலும் சில தனிப்பட்ட நபர்கள் பாவித்த பொருட்களை விற்பார்கள் உ+மாக பழைய பொருட்கள் கடை, உடுப்புக்கடை, பனிச்சறுக்கு பொருட்கள் கடை போன்றன.. அதை விட இணைய மூலமும் பாவித்த பொருட்கள் விற்றல் வாங்குதலும் மிகவும் விருப்பத்தக்கதாக உள்ளன.

விளையாட்டு ஃ கலாச்சாரம்ஃகல்வி

வருமானம் குறைந்தவர்களுக்கு கிடைக்கும் Kulturlegi | CarteCulture அடையாள அட்டையுடன் விளையாட்டு - கலாச்சார - கல்வி நிகழ்ச்சிகளில் குறைந்த செலவில் பங்குபற்றலாம். இந்த அடையாள அட்டைக்கு கரித்தாஸில் விண்ணப்பிக்கலாம். கரித்தாஸ் விண்ணப்பத்தைப் பரிசோதித்த பின்பு Kulturlegi பெறத் தகுதியுள்ளவரா என்பதை அறிவிக்கும்.

கரித்தாஸ் சந்தை

பணக்கஸ்டமுள்ளவர்கள் கரித்தாஸ் கடையில் (Caritas Markt | Epicerie Caritas) உணவு மற்றும் தினசரிப்பாவனைப் பொருட்களையும் மிக மலிவான விலைக்கு வாங்கலாம். இதற்குத் தேவையான பிரத்தியேக அட்டையை கரித்தாஸில் விண்ணப்பித்தால் அதைப் பரிசோதித்த பின்பு இந்த அட்டையைப் பெறத் தகுதியுள்ளவரா என அறிவிப்பார்கள் . பேர்ண் மாநிலத்தில் பேர்ண், Biel மற்றும் Thun ஆகிய இடங்களில் இக் கடைகள் உள்ளன.

"Tischlein deck dich"

«Tischlein deck dich» என்ற நிறுவனம் குறைந்தளவு பணம் உள்ளவர்களுக்கு இலவச உணவுப்பொருட்களை வழங்குகிறது. தனியார் மற்றும் பொது சமூக ஆலோசனை மையங்கள் இந்நிறுவனத்திற்கான அட்டைகளை வழங்கலாம். இக் கொள்முதல் அட்டை முதல்முறையாக அனைத்து கரித்தாஸ் கடைகளுக்கும் செல்லவும் உங்களுக்கு உதவுகிறது. (Caritas Markt | Epicerie Caritas). அங்கு நீங்கள் தொடர்ந்து வாங்குவதற்கு தனிப்பட்ட கரித்தாஸ்-கடை- அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசாங்க உதவிகள்

குறைந்த வருமானத்துடன் சீவிப்பவர்கள் பல சமயங்களில் அரசாங்க உதவிகளைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள். உதாரணத்ற்கு மருத்துவக் காப்புறுதிக் குறைப்பு அல்லது ஒரு மேற்பயிற்சிக்காக விண்ணப்பித்துப் பெறும் கல்வி உதவி நிதி என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தில் உள்ளவர்களுக்கு சமூகக்காப்புறுதிகள் அல்லது சமூக உதவித்தொகையும் கிடைக்கும்.