பிள்ளைகளுள்ள குடும்பத்திற்குள் சில சமயம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமை தரக்கூடிய கடினமான சூழ்நிலைகள் வரலாம். பெற்றோரால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லையானால் பெற்றோர் உதவியை நாடுவது பரிந்துரைக்கப் படுகிறது. குடும்ப ஆலோசனை நிலையத்தில் (Familienberatungsstelle|service de consultation familiale) தனிப்பட்ட முறையில் ஆலோசனை கேட்கலாம். பெற்றோர் அவசர அழைப்பிற்கு தொலைபேசியில் அல்லது மின்னஞ்சல் மூலம் நிபுணர்களிடம் பிள்ளை வளர்ப்புப்பற்றியும் கவலைகள் பற்றியும் ஆலோசனைகளைப் பெறலாம். (தொலைபேசி 0848 35 45 55 (நிரந்தர இணைப்புக்கட்டணம்) www.elternnotruf.ch) சிறுவர்களும் இளையவர்களும் தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது அரட்டை மூலம் சிறுவர்கள் அவசர அழைப்பை (Kindernotruf) நாடலாம்.( தொ.பேசி 147 (இலவசம்), www.147.ch).