குடும்பம் ஒன்றிணைதல்

குடும்ப அங்கத்தவர் ஒருவர் சுவிஸிலிருந்து அவருடன் இணைவதற்காக சில சூழ்நிலைகளில் குடும்பமே இங்கு குடிபெயர்ந்து வருதல். உறவினர் அல்லது தெரிந்தவர் விருந்தினராக வந்து போவதற்கு அவரவர் நாட்டைப் பொறுத்து விருந்தினர் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குடும்பம் ஒன்றிணைதல்

அடிப்படையில் சுவிஸில் வசிப்பவருடைய குடும்ப அங்கத்தவர் (நேரடி உறவினர் அல்லது வாழ்க்கைத்துணை) சுவிசிற்கு குடி பெயர்ந்து வருவது சாத்தியமானது (Familiennachzug | Regroupement familial). குடும்பத்தில் எந்த உறுப்பினருக்கு அனுமதி கேட்கலாம் என்பது இங்கு வசிப்பவருடைய தேசிய இனம் வதிவிட உரிமையைப் பொறுத்துள்ளது. தற்காலிக வதிவிட உரிமை (அடையாள அட்டை F) உள்ளவர்கள் சில சூழ்நிலைகளில் தமது குடும்பத்தை இங்கு வரவழைக்கலாம். ஆரம்பத்தில் குடும்ப இணைப்புக்கு தேவையான நிபந்தனைகள் பற்றி ஒரு நிபுணருடன் காலந்தாலோசிப்பது நல்லது. இது பற்றிய தகவல்களை குடிமக்கள்சேவைத்திணைக்களம் (ABEV|OPOP), வாழிட கிராமசபை அல்லது ஒருங்கிணைப்புத்திணைக்கள செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
குடும்பஇணைப்பிற்கான விண்ணப்பங்கள் மாநில குடிவரவுசேவைக்கு சமர்ப்பிக்கவேண்டும். பேர்ண், பீல் மற்றும் தூண் நகரங்களில் வசிப்பவர்கள் நகர குடியிருப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கவனம்: குடும்ப ஒண்றிணைவு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியுள் விண்ணப்பிக்க வேண்டும். (சாதாரணமாக வந்த காலத்திலிருந்து 1 முதல் 5 வருடத்தினுள். இது பிள்ளைகளுக்கு பெரியவர்களை விடக் குறைவான கால எல்லையாக இருக்கும் (உ+மாக வாழ்க்கைத்துனை).

கல்யாணத்திற்கு ஆயத்தம் செய்தல்

சுவிஸில் வசிப்பவர் வெளிநாட்டிலுள்ளவரை மணம் முடிக்க விரும்பினால் வெளிநாட்டில் வசிப்பவரை சுவிஸ்க்குள் வரவழைக்க ஒரு அனுமதி விசா கல்யாண ஆயத்தத்திற்கென விண்ணப்பிக்க வேண்டும். இந்த அனுமதியுடன் வாழ்க்கைத்துணையை இந் நாட்டிற்குள் வரவழைத்து மணம் முடிக்கலாம். குடிவரவு சேவையானது தேவையான ஆவணங்கள் மற்றும் சரியான நடைமுறைகளின் சரியான போக்குகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

நுழைவு விசா

சுவிஸ் நாட்டிற்குள் வர நுழைவு விசா எடுப்பது உதாரணத்திற்கு உறவினர்களிடம் வந்து போவது கூட அதிகமான நாட்டவர்களுக்கு இலகுவான விடயமல்ல. அதற்காக சுவிஸில் வசிப்பவர்களிடமிருந்து ஒரு அழைப்பிதழ் / அல்லது செலவுகளுக்குப் பொறுப்பு (Verpflichtungserklärung | Déclaration de prise en charge) என கடிதம் எடுக்கவேண்டும். வெளிநாட்டிலுள்ள சுவிஸ் தூதரகம் விண்ணப்பம் சார்ந்த தேவையான பத்திரங்களின் தகவல்களை வழங்கி ஆயத்த நடைமுறைக்கு உதவுவது மட்டுமன்றி விண்ணப்பத்தின் முடிவையும் எடுக்கும். இதற்கான தகவல்களை மாநில குடிவரவு ஒருங்கிணைப்புத் திணைக்களத்தில் (Amt für Migration und Integration) பெறலாம்.