விவாகரத்து (Scheidung|divorce) கணவன் மனைவி இருவருமாக இணைந்து அல்லது ஒருவரால் மட்டும் கோரப்படலாம். பிரதேச நீதிமன்றமே இதற்குப் பொறுப்பாகும். வெளிநாட்டில் மணம் முடித்தவர்களும் சுவிஸ் சட்டப்படி இங்கு விவாகரத்துப் பெறலாம். இதற்கு சுவிசில் ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கைத்தராதரத்தில் குறைந்தது 1வருடமாவது வாழ்ந்திருக்க வேண்டும். விவாகரத்து, குடியிருப்பு நிலை அல்லது அப்போது நடைமுறையிலிருக்கும் பிராஜாவுரிமைகோரல் நடைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விவாகரத்து பெற்ற வெளிநாட்டவர் சுவிசில் தொடர்ந்தும் வாழ்வதற்கு பலவிதமான நிபந்தனைக்கு உட்படவேண்டும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு விதிகள் பொருந்தும். விவாகரத்து பற்றிய தகவல்களை வாழ்க்கைத்துணை- மற்றும் குடும்ப ஆலோசனை நிலையம் அல்லது ஒரு சட்ட ஆலோசனை நிலையத்தில் பெறலாம்.