பிள்ளையைப் பதிதல்
பகிரங்கப் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு கிராமசபைகளே பொறுப்பாகும். பிள்ளையைப் பாடசாலைக்குப் பதிவதற்கு கிராமசபையிலோ அன்றி நேரடியாகப் பாடசாலை அதிபரிடமோ தொடர்பு கொள்ளலாம்.
கட்டாயப்பாடசாலை பிள்ளைகளுக்குப் போதிக்கும் அடிப்படைக்கல்வியுடன் தொடர்ந்தும் கற்பதற்கு உதவியாக இருக்கும். பகிரங்கப் பாடசாலைகள் இலவசமானவை.
பகிரங்கப் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு கிராமசபைகளே பொறுப்பாகும். பிள்ளையைப் பாடசாலைக்குப் பதிவதற்கு கிராமசபையிலோ அன்றி நேரடியாகப் பாடசாலை அதிபரிடமோ தொடர்பு கொள்ளலாம்.
கட்டாயப்பாடசாலை மூன்று ஒன்றன்பின் ஒன்றான நிலைகளைக் கொண்டது:
முதல் நிலை மழலையர் பாடசாலை மற்றும் தொடக்கப்பள்ளியின் முதல் இரண்டு ஆண்டுகள். மழலையர் பள்ளி பொதுவாக 2 ஆண்டுகள் நீடிக்கும். அடிப்படை நிலை மாதிரியும் உள்ளது (Basisstufe | Cycle élementaire). இங்கு வெவ்வேறு வயது குழந்தைகளுக்கு ஒன்றாக கற்பிக்கப்படுகிறது.
இடைநிலை நிலை 3 முதல் 6 வது தொடக்கப்பாடசாலை வகுப்புகளை உள்ளடக்கியது. 5 வது ஆண்டில் பாடசாலை பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு மேல்வகுப்புக்கு வாக்குப்பேற்றும் நடைமுறை பற்றி தெரிவிக்கிறது.
மேற்பிரிவு (Sekundarstufe I | degré secondaire I) 3 வருடங்கள் எடுக்கும். இதில் 3 வகையான வகுப்புப் பிரிவுகள் (Realschule, Sekundarschule மற்றும் சில கிராமசபையில் விஷேட Sekundarschulen) உண்டு. ஒவ்வொரு பிரிவும் வித்தியாசமான திறமையின் அடிப்படையில் பிரிக்கப்படும்.
தாய்மொழி டொச் அல்லாத பிள்ளைகளுக்கு எல்லாப் பிரிவிலும் விசேட கவனம் கொடுக்கப்படும்.
கட்டாயப் பாடசாலைக்குரிய விபரமான தகவல்களைப் பெறப் வெவ்வேறான மாநில கையெடுகளில் பார்க்கலாம்.
பகிரங்கப் பாடசாலைகள் இலவசமானவை. இங்கு ஆண் பிள்ளைகள் பெண்பிள்ளைகள் சேர்ந்தே ஒன்றாகக் கற்பார்கள். பாடங்கள் மதச்சார்பற்றவை. அதிகமான (95%) சிறுவர்கள் இளையவர்கள் தமது கட்டாயப்பாடசாலையை பகிரங்கப் பாடசாலையிலேயே படிப்பார்கள். தனிப்பட்ட பாடசாலைகளும் உள்ளன. பிள்ளைகளைத் தனிப்பட்ட பாடசாலைக்கு அனுப்ப விரும்பும் பெற்றோர் செலவுகளைத் தாமே பொறுப்பெடுக்க வேண்டும்.
பிள்ளைகளின் தினசரிப் பாடசாலை நாட்கள் மற்றும் அவர்கள் திறமைகள் பற்றியும் பெற்றோருக்கு அறியத்தருவது பாடசாலையின் பொறுப்பாகும். அதற்காகவே நிலைபற்றிய கலந்துரையாடல் (ஆசிரியர் பெற்றோருக்கிடையில்), பெற்றோர் மாலை (பாடசாலைத் தகவல்களைப் பெற்றோருக்கு அறியத்தருதல் ) மற்றும் தகவல் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அதிகமாக இவை எல்லாவற்றிற்கும் பெற்றோர் பங்குபற்ற வேண்டும்.
இரண்டு பெற்றோர்களும் கலந்து கொள்ள முடியாவிட்டால், அவர்கள் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்கள் எப்படியும் தகவலை எப்படி பெற முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும். முக்கியமான முடிவுகள் (உ+மாக இரண்டாம் நிலை I க்கு வகுப்பேற்றப்படுவது ) பெற்றோர் மற்றும் பிள்ளையுடன் கதைக்கப்படுகிறது. பிள்ளையை ஒழுங்காகப் பாடசாலைக்கு அனுப்புவதற்குப் பெற்றோரே பொறுப்பாகும். பிள்ளை பாடங்களுக்குச் சமூகமளிக்க முடியாவிடின் (உ+மாக நோய்) அது பற்றிப் பெற்றோரே அறிவிக்கவேண்டும். பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்ய அல்லது ஒரு சோதனையை தயார் செய்ய வேண்டும் என்றால் வீட்டில் அமைதியான இடத்தைக் பெற்றோரே ஏற்பாடு செய்ய வேண்டும். அதேசமயம் தினமும் பாடசாலை வேலைகளை பார்ப்பதன் மூலம் பெற்றோரின் அக்கறையையும் உதவியையும் காட்டலாம். சுவிஸ் கல்வித்திட்டம் பற்றிய விபரம் தெரியாதவர்கள் இதற்கான டொச் அல்லாத வேறு மொழிகளில் நடக்கும் விசேட தகவல் நிகழ்ச்சிநேரங்களில் பங்கெடுக்கலாம்.
be.ch / மேலதிக தகவல்கள் (DE | FR)
ஏதாவது வினாக்கள் இருப்பின் பெற்றோர் எப்போதும் முதலில் வகுப்பாசிரியரை நாட வேண்டும். பெற்றோருக்கு உதவி தேவைப்படுமிடத்து வகுப்பாசிரியரே உதவி செய்வார். பிள்ளைக்கு ஏதாவது தேவைப்படுவதாக உணர்ந்தாலோ அன்றி ஏதாவது வினாக்கள் இருப்பினும் ஆசிரியரும் முதலில் பெற்றோரை நாடவேண்டும். பொதுவாகவே பெற்றோர் ஆசிரியருடன் தொடர்பைப் பேணி ஒருங்கிணைந்து செயற்படு தல் மிகவும் முக்கியம். பிள்ளை மனதில் அல்லது சூழலில் ஏதாவது கஸ்டங்களை அனுபவித்தால் கல்விஆலோசனை நிலையத்தில் (Erziehungsberatung|Service psychologique pour enfants et adolescents) பிள்ளையும் பெற்றோரும் இலவச உதவியை நாடலாம்.
be.ch / மேலதிக தகவல்கள் (DE | FR)