பட்டப்படிப்பு அங்கீகாரம்.

வெளிநாட்டுப்பபட்டுப்படிப்பு மற்றும் இறுதி அறிக்கை எப்போதும் சுவிசில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த பட்டப்படிப்பு சான்றிதளை அங்கீகரிக்கும்படி கோரலாம். ஒருசில தொழில்களுக்கு இவை நன்கு பிரயோசனப்படும்.

அங்கீகரிக்கப்படல்

வெளிநாட்டு பட்டம் உள்ளவர்கள் அவற்றை சுவிசில் அங்கீகரிக்கும்படி கோரலாம். இந்த அங்கீகரிப்பின் மூலம் வெளிநாட்டின் பட்டம் அல்லது பயிற்சி முடிவு சுவிசின் பட்டம் அல்லது படிப்பின் முடிவுடன் ஒரே தகமையில் உள்ளதெனப்படும். சில முறைமைப்படுத்தப்பட்ட தொழில்களுக்கு (பராமரிப்புதொழில், ஆசிரியர் போன்றன.) அத்தொழில்களை செய்வதற்கு இவ் அங்கீகாரம் முக்கியம். இவ் அங்கீகாரத்திற்கு அவற்றின் தொழில் மற்றும் பட்டப்படிப்பைப் பொறுத்து வௌ;வேறு நிலையங்கள் பெறுப்பானவை. ஓர் அங்கீகரித்தலானது கட்டணத்துக்குட்பட்டது. கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான மாநில செயலகம் SBFI வெளிநாட்டு டிப்ளோமாக்களை அங்கீகரிப்பது குறித்த பொதுவான கேள்விகளுக்கு பொறுப்பாகும்.
(Staatssekretariat für Bildung, Forschung und Innovation SBFI | Secrétaire d'État à la formation, à la recherche et à l'innovation SEFRI)

தரம் உறுதிசெய்தல்

முறைமைப்படுத்தப்படாத தொழில்களை சுவிசில் செய்வதற்கு பட்டப்படிப்பு அல்லது பரீட்சை முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. இந்தத் தொழில்களுககாக ஒரு தரநிலை உறுதிசெய்தலிற்கு (Niveaubestätigung|Attestation de confirmation de niveau) வின்ணப்பிக்க வேண்டும். இது வெளிநாட்டு பட்டப்படிப்பின் பெறுமதியை சுவிசின் பயிற்சித்திட்டத்துடன் ஒப்பிடுகிறது. இவ் உறுதிப்படுத்தல் வேலைதேடுதலிற்கு உதவும். தகவல்களை தேசிய பட்டப்டிப்பு அங்கீகரித்தல் தொடர்பு நிலையத்தில் (Nationale Kontaktstelle für Diplomanerkennung | Point de Contact national pour la reconnaissance de diplômes) அல்லது BIZ தொழில் ஆலோசனை மற்றும் தகவல் மையத்தில் பெறலாம் (Berufsberatungs- und Informationszentren BIZ | Centres d'orientation professionnelle OP).

தொழிற்பயிற்சி முடிவை மீளச்செய்தல்.

தொழில் அனுபவம் , ஆனால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்லது படிப்பு முடிவு இல்லாதவர்கள் சுவிஸ் அடிப்படைத்தொழிற்கல்வி அல்லது உயர் தொழிற்கல்வியை படித்துமுடிக்கலாம். இந்நடைமுறை அவர் முன்பு செய்திருந்து படிப்பு, தொழில் அனுபவம் மற்றும் வயதில் தங்கியுள்ளது. எதுவாயினும் ஓரு நன்கு டொச் தெரிந்தநிலை (B1/B2 ஜேர்மன் தரம்) மிகமுக்கியமானது. விரும்பியவர்கள் BIZ தொழில் ஆலோசனை மற்றும் தகவல் மையத்தில் (BIZ | OP) இலவச தகவல்களையும் ஆலோசனைகளையும் பெறலாம். எவர் தனது தொழிற்கல்வி பரீட்சையை எடுக்கின்றார்களோ, அவர் தன் தொழில் சந்தையில் மேலதிக சந்தர்ப்பங்களையும், மேற்படிப்புக்கு செல்வதற்கான வழியையும் பெற்றுக்கொள்கிறார்.