தொழிற்கல்வி / துறைசார் பாடசாலைகள்

கட்டாயப்பாடசாலை முடிந்த பின்பு அதிகளவு இளையவர்கள் தொழில்கல்வி கற்கவே முடிவுசெய்கிறார்கள். எவர் உயர்கல்வி கற்க விரும்புகிறார்களோ அவர்கள் கட்டாயமாக ஒரு துறைசார் பாடசாலையில் ஒரு புலமைச்சித்தி பெற்றிருக்கவேண்டும். இதன் பின்பு தொழில்கல்வி கற்கவும் போகலாம்.

கல்வியின் அர்த்தம்

நல்ல கல்வியும் தொழில் வாழ்வில் நல்ல வேலையும் ஒரு உயர்ந்த அர்த்தத்தைக் கொடுக்கும். கட்டாயப்பாடசாலை முடித்த இளையவர்களுக்குப் பலவிதமான வழிகள் திறந்துள்ளன. அதில் ஒரு நல்ல வழி அவர்கள் தொழில் வாழ்வில் தம்மை இணைப்பதாகும். (Sekundarstufe II | degré secondaire) தொடர்ந்து கற்காமல் நல்ல வேலையை எடுப்பது கஸ்டம். தொழிற்கல்வி ஆலோசனை- மற்றும் தகவல்மையம் (BIZ | OP) இளையவர்கள் மற்றும் பெற்றோருக்கான கல்வி - பயிற்சி பற்றிய கேள்விகளுக்கு இலவச ஆலோசனையைப் வழங்குகிறது. பெற நாடலாம். நடுநிலைப்பள்ளி- மற்றும் தொழிற்பயிற்சி திணைக்களந்தான் மாநிலநிர்வாக பொறுப்புக்கூறல் பொறுப்பில் இருக்கிறது. (Mittelschul- und Berufsbildungsamt | Office des écoles moyennes et de la formation professionnelle).

தொழில் அடிப்படைக்கல்வி

கட்டாயப்பாடசாலை முடிந்த பின்பு அதிகளவு இளையவர்கள் தொழில் அடிப்படைக் கல்வி (தொழில் பயிலுதல், Berufslehre | apprentissage) கற்கவே முடிவு செய்கிறார்கள். இளையவர்கள் தொழில் கற்கும் போது ஒரு நிறுவனத்தில் தொழில் செயன்முறையைப் பயிலுவது மட்டுமன்றி அதனுடன் சேர்ந்து தொழில் பாடசாலைக்கும் செல்வார்கள். தெரிவு செய்வதற்கு 250 க்கு மேற்பட்ட தொழில் துறைகள் உள்ளன. ஒரு தொழில்கல்வி பயில 2 -4 வருடங்கள் வரை எடுக்கும். இளையவர்கள் தாமாகவே தொழில் பயிலுமிடத்தை ஒரு நிறுவனத்தில் தேட வேண்டும். கட்டாயப் பாடசாலை வருடத்தில் கடைசி இரு வருடங்களும் தொழில் பயிலுமிடம் தேடுவதற்குரியது. இதற்குப் பாடசாலை உதவி செய்த போதும் பெற்றோரின் உதவியிலும் தங்கியுள்ளது. தொழிற்கல்வி ஆலோசனை- மற்றும் தகவல்மையம் (BIZ | OP) இளையவர்களுக்காகப் பலவித வசதி வாய்ப்புகளைக் காட்டுவது மட்டுமன்றி இலவச ஆலோசனையும் தருகிறது. தொழில் பயின்ற இளையவர்கள் தொழில்புலமைக்கு (Berufsmaturität | Maturité professionnelle) விண்ணப்பிக்கலாம்.இதை தொழில் அடிப்படைக்கல்வி பயிலும்போதோ அன்றி முடிந்த பின்போ விண்ணப்பிக்கலாம்.
தொழிற்துறைபுலமை கல்வியானது ஒரு தொழில்துறைக்கல்லூரிக்கு செல்வதற்கான வழியாப்பார்க்கப்படுகிறது. பேக்கலரேட் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தை அணுக உதவுகிறது. சுவிட்சர்லாந்தில் பல தொழில்களுக்கு ஒருஜிமிநாசினாசிய நடுநிலைபாடசாலையில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டிய அவசியமில்லை.

துறைசார் பாடசாலைகள்

துறைசார் பாடசாலைகள் (Mittelschulen | Ecoles moyennes) அகலமான பொது அறிவைத் தருகின்றன. அதே வேளை பரந்த கல்வியறிவையும் தந்து பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்விப்பாடசாலைக்குப் (Fachhochschulen|Hautes écoles spécialisées) போக வழி செய்கிறது. யிம்நாசியம் போய் புலமையடைந்தவர்கள் (gymnasiale Maturität | maturité gymnasiale) தொழில் கற்றுப் புலமையடைந்தவர்கள் (Fach-oder Berufsmaturität | maturité professionnelle). யிம்நாசியபுலமை முடித்தவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்குச் செல்ல தகுதி பெறுகிறார்கள். துறைசார் அல்லது தொழில்புலமை கல்வியானது நேரடியாக உயர்கல்விப்பாடசாலைக்கு செல்ல வழிவகுக்கிறது. உயர்கல்விப்பாடசாலையானது யிம்நாசியப்புலமை கற்றவர்களுக்கான வழிவகை ஏற்பாடு செய்வதுடன் பல்கலைக்கழகத்திற்கு துறைசார் அல்லது தொழில்புலமை மாணவர்களுக்கு (ஒரு பரீட்சை மூலம்) செல்லவும் வழிவகுக்கிறது. சில வேளைகளில் அதற்கு மேலதிக நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

இணைப்புச்சலுகை

கட்டாயப் பள்ளிக்குப் பிறகு ஒரு இடைக்காலத் தீர்வு சலுகைகள் (Brückenangebote | Solutions transitoires). இது இன்னும் ஒரு தொழிற்பயிற்சி நிலையைக் கண்டுபிடிக்காத அல்லது ஒரு பயிற்சி அல்லது நடுநிலைப் பள்ளிக்கு இன்னும் சிறப்பாகத் தயாராக விரும்பும் இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது. கட்டாயப் பள்ளிப் படிப்புக்குப் பிறகு வரும் இளைஞர்களும் ஒரு பாலச் சலுகையில் கலந்து கொள்ளலாம்.
இதிலுள்ள சிரமம் என்னவெனில் வேலைச்சந்தையில் உள்துளைவது. இந்த இணைப்புச்சலுகை இளைஞர்களை ஒரு பயிற்சிவேலைக்கு அல்லது ஒரு தொழிற்கல்வி பெறுவதற்கு உதவுகிறது. இது பற்றி அறிய விரும்புபவர்கள் பேர்ண் மாநில இடநிலைச்சலுகைக்கான சிறப்பு அலுவலகம் அல்லது தொழில் ஆலோசனை மற்றும் தகவல் மையங்களுக்கு (BIZ | OP) தொடர்புகொள்ளலாம்.