ஓய்வு விதிமுறைகள்

ஓய்வு விதிமுறைகளானவை ஓய்வு பெற்றவர்கள் வாழ்வதற்கு போதியளவு பணத்தை கொண்டிருப்பதை உறுதிசெய்கிறது. சுவிஸ் ஓய்வுகால நடைமுறை 3 பிரிவாக உள்ளன: வயோதிப-பின்தங்கிய காப்புறுதி(AHV) (Alters- und Hinterlassenenversicherung, AHV | assurance-viellesse et survivants, AVS),, தொழில் ஓய்வூதிய ஏற்பாடு(ஓய்வூதியம்) (Pensionskasse | caisse de pension), சுயாதீன வயோதிபர் ஓய்வூதியம் (3.Säule)

வயோதிப- மற்றும் பின்தங்கியோர் காப்புறுதி (1. Säule | 1er pilier)

வயோதிப- மற்றும் பின்தங்கியோர் காப்புறுதி (Alters- und Hinterlassenenversicherung, AHV | assurance-viellesse et survivants, AVS) ஓர் அரச நிறுவனம். பெரும்பாலான வயது வந்தோர் இதற்கு கட்டணம் செலுத்தவேண்டும். இக்கட்டணமானது தொழில் புரிவோரின் சம்பளத்தில் நேரடியாகக்கழிக்கப்படும், அத்துடன் வேலைகொடுப்போர் அரைப்பகுதியை பொறுப்பேற்பர். சொந்தத்தொழில் புரிவோரும் தொழில் புரியாதோரும் வாழும் கிராமசபை வயோதிப- மற்றும் பின்தங்கியோர் காப்புறுதி அலுவலகத்தில் (AHV-Zweigstelle der Wohngemeide | l’agence AVS de votre lieu de domicile) எப்படி தமது கட்டணத்தை செலுத்துவது பற்றி தெரிவிக்க வேண்டும். AHV ஓய்வுதியம் எடுப்பவர்களுக்கு மாதாந்தம் ஓய்வூதியத்தை வழங்குகிறது. செலுத்தப்படும் ஓய்வூதியத்தொகையானது அவர்கள் முன்பு செலுத்திய தொகையைப் பொறுத்துள்ளது. அத்துடன் AHV ஒருவர் இறந்தால் அவரின் மனைவிக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் உதவி புரிகிறது. (விதவை- மற்றும் பிள்ளைகள் ஓய்வூதியம்). ஒவ்வொருவரும் தமது சொந்த காப்புறுதி இலக்கத்தை கொண்ட AHV அட்டையை பெற்றுக்கொள்வர்

தொழில்ரீதியான ஏற்பாடு (2. Säule| 2ème pilier)

ஓய்வூதியம் எடுத்தபின் தாம் விரும்பியபடி தொடர்ந்து வாழ்வதற்கு, AHV மட்டும் போதியதாக இருப்பதில்லை. இதனால் தொழில் புரிவோருக்காக தொழில் ஓய்வூதிய ஏற்பாடு (Pensionskasse | caisse de pension),, ஏற்படுத்தப்பட்டு இது குறிப்பிட்ட வருடாந்த சம்பளத்திலிருந்து கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் கட்டணம் மாதச்சம்பளத்திலிருந்து கழிக்கப்படுவதுடன் வேலை வழங்குவோர் குறைந்தது அரைப்பங்கினை செலுத்த வேண்டும். சொந்தத் தொழில் புரிவோர் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை, எனினும் அவாகள் சுயாதீனமாக இதுபற்றி தீர்மானிக்கலாம், எனினும் அதற்கு அவர்களே பொறுப்பானவர்கள். இந்த ஓய்வூதிய நிறுவனத்தில் சேமிக்கப்பட்ட பணம் ஓய்வூதியக்காலத்தில் ஓய்வூதியமாக அல்லது ஒரே தடவையில் எடுக்கக்கூடியதாக இருக்கும். சில விசேட நிலைகளில் இப்பணம் முன்கூட்டியே கொடுக்கப்படலாம்: ஒருவர் சொந்த நிறுவனம் ஆரம்பித்தால், சுவிசைவிட்டு வெளியேறினால், சொந்த வீடு கட்டுவதாயின் அல்லது ஒரு வீடு வாங்கினால்.

சுயாதீன வயோதிக ஏற்பாடு (3. Säule|3e pilier)

இந்த 3ம் ஏற்பாடு (3. Säule | 3e pilier) ஓர் சுயாதீனமான வயோதிபர்கால ஏற்பாடு, அத்துடன் வருமானவரியிலிருந்து கழிக்கக்கூடிய ஒன்று. இது காப்புறுதிநிறுவனங்கள் அல்லது வங்கிகளில் தொடங்கலாம். இந்த 3ம் ஏற்பாட்டில் பணத்தை சேகரித்து அதன்மூலம் வயோதிப காலத்தில் மேலதிகமாக வைத்திருக்கலாம்.

மேலதிக சேவைகள்

வயோதிபர்கள் தமது வாழ்வுக்கு AHV மற்றும் ஓய்வூதியம் காணாதவிடத்து அவர்கள் மேலதிக பொருளாதார உதவிக்கு (Ergänzungsleistungen | prestations complémentaires).உரித்துடையவர்களாவர். இவர்கள் வாழும் கிராமசபை வயோதிப- மற்றும் பின்தங்கியோர் காப்புறுதி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இங்கு எவருக்கு இதற்கான உரிமை உள்ளது என்பது பற்றி தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலதிக உதவிச்சேவையானது வரிசெலுத்துபவர்களினால் பணமுதலீடு செய்யப்படுகிறது.