சமூக நலன்புரி உதவி

"சமூகநலன்புரி உதவியானது வாழ்வதற்கு குறைந்தளவு பணத்தை கொண்டுள்ள மனிதர்களுக்கும், சமூகக்காப்புறுதியிலிருந்து குறைந்த அல்லது எதுவுமே கிடைக்காத மனிதர்களுக்கும் உதவிசெய்கிறது. இதன் நோக்கம் மனிதர் மீண்டும் சொந்தமாக உழைக்கசெய்வதாகும். இது அரசின் ஒரு உதவியே அல்லாமல் ஒரு காப்புறுதியின் செயற்பாடல்ல. "

சமூக நலன்புரி உதவி

சமூக நலன்புரி உதவியானது (Sozialhilfe | aide sociale) சுவிசில் அவசரஉதவியை எதிர்பார்க்கும் அனைத்து மனிதர்களுக்கும் உதவுகிறது. இது அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை உள்ளடக்கியுள்ளது. இது பணவுதவியுடன் ஆலோசனையும் வழங்குகிறது. இதன் நோக்கம மனிதர் விரைவில் பொருளாதாரத்தில் சுயநிலையை அடைதலாகும். சமூக நலன்புரி உதவியானது எவராவது வேறுவழிகளில் தமது வாழ்க்கைக்கு போதியளவு பணஉதவி பெற்றால் கொடுக்கப்படமாட்டாது - உதாரணமாக வேலை இழப்புபணம், ஓய்வூதியம், சம்பளம் அல்லது உறவினரின் உதவி- . அத்துடன் கடனை அடைக்கவும் உதவாது. மனிதர் மீண்டும் போதியளவு பணம் வைத்திருப்பாராயின் எடுத்த பணத்தை மீண்டும் திருப்பிச்செலுத்த வேண்டும். இந்தச்சமூக நலன்புரி உதவியானது வரி செலுத்துபவர்களால் முதலீடு செய்யப்படுகிறது.

சமூக நலன்புரி உதவிக்கு விண்ணப்பித்தல்

எவர் நலன்புரி உதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கிராமசபை நலன்புரி பிரிவை (Sozialdienst | Service social) நாடவேண்டும். அங்கு வருமானம் மற்றும் சொத்து என்பவற்றை தாக்கல் செய்யவேண்டும். அதைத்தொடர்ந்து அவரிற்கான தகுதி ஆராயப்படும். உதவியின் தொகை தனித்தனியாக ஆராய்ந்து உறுதிசெய்யப்படும். தவறான தகவல்கள் அல்லது மறைத்தல் தண்டணைக்குரியது. சமூகநலன்புரிப்பிரவு கட்டளைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொடுக்கும். இதைப்பின்பற்றாவிடின் சேவைகள் குறைக்கப்படலாம். ஆலோசனை உரையாடலில் பங்குபற்றல் கட்டாயமானது. இதில் இருப்போர் தமது அவசரஉதவி வேண்டல் நிலையில் இருந்து சொந்தமாக மீள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கடமைப்பட்டுள்ளாகள்.