சமூகசேவைகள் காப்புறுதி நடைமுறை

"சுவிசில் வாழும் குடிமக்கள் சமூகசேவைகள் காப்புறுதி மூலம் பல்வேறு இடர்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். இக்காப்புறுதிகள் பல விதங்களில், உதாரணமாக யாராவது தனது தொழிலை இழந்தால் அல்லது சுகவீனமாயிருந்தால் உதவும். அவர்கள் அதுமட்டுமல்லாது குடும்பங்கள் மற்றும் அனைவருக்கும் ஆதரவளிக்கும். "

அடிப்படையானவை

சமூக காப்புறுதிகள் சுவிசில் குடியிருப்போரினால் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு ஒருமைப்பாடான நடைமுறை: பெரும்பான்மையான மக்கள் இதற்கு பணம் செலுத்துகிறார்கள், தனிப்பட்ட மற்றும் குறிப்பிட்ட குழுவினர்கள் உதவியைப் பெற்றுக் கொள்கிறார்கள். சமூகசேவை காப்புறுதிகள் பெரும்பாலானவை கட்டாயமானவை. கட்டணங்கள் தொழில் புரிவோரின் சம்பளத்திலிருந்து நேரடியாக கழிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தொழில் வழங்குவோர், சொந்த தொழில் புரிவோர் மற்றும் தொழில் அற்றோரும் பணக்கட்டணங்கள் செலுத்துவர்

சேவைகள்

சமூகசேவை காப்புறுதிகள் குறிப்பிட்ட வாழ்க்கையில் வாழ்பவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. அவர்கள் நாள்ப்பணம், ஓய்வூதியம் அல்லது படிகள் அல்லது உறுதியான வருத்தம் மற்றும் விபத்துக்கால செலவுகளை பொறுப்பெடுக்கும். சமூகசேவை காப்புறுதிகள் அனைத்தும் அரசால் வரையறை செய்யப்பட்டுள்ளன.

எப்போது மனிதனுக்கு ஆதரவளிக்கப்படுகிறது?

  • வயோதிபசமயத்தில், இறந்தால் மற்றும் இயலாநிலை (3 ஏற்பாடுகள்: AHV/IV, தொழில் ரீதியான ஏற்பாடு, தனியார் ஏற்பாடு)
  • சுகவீனம் மற்றும் விபத்து (சுகவீன- மற்றும் விபத்துக்காப்புறுதி)
  • தாய்மையுறும்போது (தாய்மைப்படிவகைகள்)
  • வேலையில்லாதநிலமை (வேலையிழந்தோர் காப்புறுதி)
  • பிள்ளைகளிருந்தால் (குழந்தைப்படி)