வேலையிழந்தோர் காப்புறுதி
வேலையிழந்தோர் காப்புறுதி (ALV | AC) ஒரு அரசநிறுவனம் மற்றும் அனைவருக்கும் கட்டாயமானது. இதற்கான மாதக்கட்டணம் சம்பளத்திலிருந்து நேரடியாக கழிக்கப்படும், வேலைகொடுப்போர் அரைவாசியை பொறுப்பேற்பர். சொந்தத்தொழில் புரிவோர் வேலையற்றோர் காப்புறுதியில் சேரமுடியாது. எவர் தொழில் இழக்கையில் வேலையற்றோர் இழப்பீட்டுச்செயலகத்திலிருந்து மாதசம்பளத்தின் பகுதியாக கிடைக்கும். (வேலைஇழப்புப்பணம், Arbeitslosengeld | allocation chômage) எப்போது, எவ்வளவு வேலைஇழப்புப்பணம் கிடைப்பது வௌ;வேறு நிலைகளில் தங்கியுள்ளது. உதாரணமாக எவ்வளவு காலம் வேலை செய்துள்ளார் அல்லது என்ன காரணத்தால் வேலையற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பன..