வேலைக்கு அனுமதி
வேலைக்கு அனுமதி பற்றிய கேள்விக்குப் பதில் வதிவிட அனுமதி கிடைக்கும் போதே தெரிந்துவிடும். சாதாரணமாக சுவிஸில் வதிவிட உரிமை பெற்றவர்கள் வேலை செய்யலாம். வழக்கமாக வேலை வழங்குபவர் தான் அனுமதிக்கு விண்ணப்பிப்பார். ஏதாவது சந்தேகங்களிருப்பின் கீழுள்ள ஏதாவது நிலையங்களில் உதவி பெறலாம். இந்த நிலையங்கள் சுவிஸில் இன்னும் குடியிருப்புக்கு வராமல் இங்கு வந்து வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் ஆலோசனை கொடுக்கும்.அகதி அந்தஸ்துப் பெற்றவர்களுக்கும் (B காட்) அகதி அந்தஸ்து ஏற்கப்பட்டோ அல்லது ஏற்கப்படாமலோ தற்காலிக வதிவிட அனுமதி (F காட்) பெற்றவர்களுக்கும் 2019 தொடக்கம் விசேட அனுமதி தேவையில்லை. ஒவ்வொரு வேலையின் தொடக்கத்திலும் முடிவிலும் உத்தியோகபூர்வ படிவமூலம் மாநிலத்திற்கு அறிவிக்க வேண்டும் (அறிக்கையளிக்கும் கடமை | Meldepflicht | Procédure d'annonce). வேலை செய்யும் இடத்து மாநிலமே இதற்குப் பொறுபாகும். இந்த பதிவு இலவசமானது. அகதி அந்தஸ்துத் தேடுபவர்களுக்கு (N காட்) தொடர்ந்தும் அனுமதிப் பத்திரம் தேவை
இடது, தொடர்பு
be.ch / அனைத்து நாட்டவர்களுக்குமான தகவல்கள் (DE | FR)
be.ch / உள்வாங்கலிற்கான நிலையங்களின் தொடர்பும் விலாசங்களும் (DE | FR)
be.ch / பதிவு நடைமுறை பற்றிய தகவல்கள் (DE | FR)
be.ch / Informationen und Formular zum Stellenantritt mit Ausweis N
be.ch / Informationen und Formular zum Stellenantritt mit Ausweis F und Ausweis B